Tuesday, June 3, 2008

கண்ணழகு சிங்காரிக்கு ...

கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
பொன்னழகு அத்தானுக்கு இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே கதை கதையாய் சொல்ல வந்தேன்
தலைவா வந்தேனே , எனை நான் தந்தேனே

கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
இன்னும் என்ன நாணம் என்னோடு ?
அஞ்சி நின்ற போது , அன்னை வரும் போது
மெல்ல வரும் தூது கண்ணோடு

பஞ்சனையின் மேடையில் எனை தொடும் அன்பு மனம்
நெஞ்சமெனும் ஊஞ்சலில் தினம் வரும் இன்ப சுகம்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே


மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்
தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
ஆசை மனம் எங்கும் அங்கே தான்
தொட்டவுடன் மேனியில் மழைமுகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே , எனை நான் தந்தேனே

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி