Wednesday, June 4, 2008

கல்யாண பொண்ணு ...

கல்யாண(ப்) பொண்ணு கண்ணான(க்) கண்ணு
கொண்டாடி வரும் வளையல் ! அம்மா --
பூவோடு வருமே ! பொட்டொடு வருமே !
சிங்காரத் தங்க வளையல் !
வங்கி வளையல் ! சங்கு வளையல் !!
முத்து முத்தான வளையலுங்க !!! ((கல்யாண))

அத்தானின் காதல் முத்தாமலிருந்தால்
பித்தாகச் செய்யும் வளையல்
சில சித்தான உடம்பு வத்தாமலிருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்!
அன்ன நடை பின்னி வர
சின்ன இடை மின்னி வர
முன்னாடி வரும் வளையல்
இது அத்தை மவ ரெத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல் ! ((கல்யாண))

பொண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா
மூணாக செய்யும் வளையல் !
இது ஒட்டாத மனசில் கிட்டாத சுகத்தை
கட்டாயம் தரும் வளையல்
மாமியாரை மாமனாரை சாமியாரா மாத்தி விட
மந்திரிச்சுத் தந்த வளையல்
இளங் காளையர்கள் கெஞ்சி வர
கன்னியர்கள் கொஞ்சி வர
தூதாக வந்த வளையல் ! ((கல்யாண))

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி