Friday, June 6, 2008

கட்டி தங்கம் வெட்டி எடுத்து ....

கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா ..(கட்டி)

தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு

தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போல வளைகிறாள்
குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்.. (கட்டி)

காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ,
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ..(கட்டி)

 https://youtu.be/kzzUVZoAIuE

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி