Friday, June 6, 2008

என்னம்மா ராணி ....

என்னம்மா ராணி... பொன்னான மேனி ...
ஆல வட்டம் போடவந்ததோ...
என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போடவந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று
ஏழை பக்கம் சாடுகின்றதோ - ஆஹாஹ்
ஏழை பக்கம் சாடுகின்றதோ
உல்லாச தோட்டம் உருவாக்கும் கூட்டம்
பாட்டாளி மக்கள் அல்லவோ
உல்லாச தோட்டம் உருவாக்கும் கூட்டம்
பாட்டாளி மக்கள் அல்லவோ
உருவத்தை பார்த்து உள்ளத்தை மதிப்பது
மாபெரும் தவறல்லவோ - ஆஹாஹ
மாபெரும் தவறல்லவோ (என்னம்மா ராணி)

பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து
உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தா
பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து
உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தா
கட்டாந் தரையிலே கல்லை உடைத்து
உங்க கண்ணாடி மாளிகையை யார் படைத்தா
கட்டாந் தரையிலே கல்லை உடைத்து
உங்க கண்ணாடி மாளிகையை யார் படைத்தா - ஆஹாஹ
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா (என்னம்மா ராணி)

பத்தும் பறந்தோடும் பசி பிணிக்கு
உங்க பவழமும் வைரமும் பயன் படுமா
பாரோர்க்கு பச்சரிசி படியளக்கும்
இந்த பண்பான மக்களிடம் அலட்சியமா - ஆஹாஹ
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா


அத்தரிலே நித்தம் நித்தம் குளித்தாலும்
பட்டு மெத்தையிலே பூ விரித்து படுத்தாலும்
அத்தனையும் ஒரு நாள் முடிந்து விடும்
ஏழை அவசியம் அப்போது புரிந்து விடும் - ஆஹாஹ
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா (என்னம்மா ராணி)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி