பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
நல்ல தமிழ் இசை அமுதென வருகையில்
நெஞ்சம் அங்கே சென்றது
மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை
தென்றல் சொந்தம் கொண்டது
வெள்ளி ரதமென உருகிய பனியினில்
பெண்மை தெய்வம் நின்றது
உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள்
அள்ளி அள்ளி தந்தது
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
ஆளில்லாத நீரோ
நீரில்லாத ஆறோ
ஆறில்லாத ஊரோ
அவளில்லாத நானோ
மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ
எனக்காக ஏங்குகின்ற
செவ்வல்லி கண் என்பதோ
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பருவம் கொண்ட பாவை
பனி படர்ந்த பார்வை
வரவு சொல்ல தோன்றும்
உறவு கொள்ள வேண்டும்
மலர் மாலை யாருக்கென்று
பெண் பாவை கண் தேடுமோ
எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம்
என்னோடு ஒன்றாகுமோ
Wednesday, June 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
காலத்தை வென்ற பாடலுக்கு நன்றிகள் ;
படல்களை தொகுத்து அளித்து வழங்கும் தங்கள் பணி
பாராட்டுகுரியது
பதிவுக்கு நன்றி மேடம்
மக்கள் திலகத்தின் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதில் எந்த சந்தேகமுமில்லை
மிக்க நன்றி பிரியா உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி