Wednesday, June 4, 2008

நான் ஒரு குழந்தை ...

நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

ஊரறியாமல் உறவறியாமல்
யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே
ஓடிய கால்கள் ஓடவிடாமல்
யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே
ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே
ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி