Monday, June 2, 2008

நீங்க நல்லா இருக்கோணும் .....

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்...
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி...
 
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி...

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட...
கண்ணம்பாடி அணைகடந்து நலம் பாடி...

ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க, 

சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில், 
நீண்ட வரலாறாய்...

வீடு தாண்டா கற்பு விளங்கும் 

தமிழ் மகள் போல்...
ஆடுதாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து...

அகண்ட காவிரியாய் பின் தவழ்ந்து...

கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் 

கொள்ளிடத்தில் 
காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து...
தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம் 

தனிக்கருணை காவிரிபோல்......

செல்லும் இடமெல்லாம் 

சீர் பெருக்கித் தேர் நிறுத்தி 
கல்லும் கனியாகும் கருணையால் 
எல்லோர்க்கும் பிள்ளையென நாளும் 
பேசவந்த கண்மணியே 
வள்ளலே 
எங்கள் வாழ்வே 
இதயக் கனி 
எங்கள் இதயக் கனி 
இதயக் கனி...

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக

பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேறஇயற்றியவர்: கவிஞர் புலமைப்பித்தன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி
ஆண்டு: 1975

இந்த பாடலின் அழகான ஆரம்ப வரிகளை தந்த சங்கர் அவர்களுக்கு நன்றி

7 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல பதிவு...
ரொம்ப நாளாய் 'நீங்க நல்லாய் இருக்கணும்' பாடலின் வரிகள் தெரியாமல் இருந்தது. கருத்தாழம் மிக்க அந்தக் கவிதை வரிகள் என்றும் மறக்கமுடியாத ஒன்று!
அதை எனது முக நூலில் பதிவேற்றியுள்ளேன்.
நன்றிகள் பல...!

பூங்குழலி said...

மிக்க நன்றி தோழரே ..."நான் ஆணையிட்டால் " பாடலை அடுத்து தமிழ் திரைப்பாடல்களில் வலியதான பாடல் இது

Chandra Sekaran said...

Rompa nantri

Sankar said...

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்...
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி...
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி...

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட...
கண்ணம்பாடி அணைகடந்து நலம் பாடி...

ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க, சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில், நீண்ட வரலாறாய்...

வீடு தாண்டா கற்பு விளங்கும் தமிழ் மகள் போல்...
ஆடுதாண்டும் காவிரியாய் அடங்கி நடந்து...

அகண்ட காவிரியாய் பின் தவழ்ந்து...

கரிகாலன் பேர் வாழும் கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து...
தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்......

செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும் பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி எங்கள் இதயக் கனி இதயக் கனி...

Sankar said...

நன்றி ...

kam said...

இப்பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன்

பூங்குழலி said...

திருத்தியதற்கு நன்றி

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி