Monday, June 9, 2008

சிரிக்கின்றாள் இன்று ...

பாடல் :வாலி
இசை :டி.ஆர்.பாப்பா
பாடியவர்கள் :சீர்காழி கோவிந்தராஜன்,சுசீலா


சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
(சிரிக்கின்றாள்)


அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
உள்ளத்தாமரை மலராதோ ?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ?
இருண்ட பொழுதும் புலராதோ ?
(சிரிக்கின்றாள்)


தேன் மலராடும் மீன் விளையாடும்
அருவியின் அழகைப் பாரீரோ
நான் வரவில்லை என்பதனால்
உன்மீன் விழி சிந்திய கண்ணீரோ
மலர் மழை போலே மேனியின் மேலே
குளிர் நீரலைகள் கொஞ்சிடுதே
தளிர்ப் பூங்கொடியைத் தழுவி இருந்தே
குளிர் காய்ந்திடவே கெஞ்சிடுதே
குளிர் காய்ந்திடவே கெஞ்சிடுதே


சிரிக்கின்றோம் இன்று சிரிக்கின்றோம்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
சிரிக்கின்றோம் இன்று சிரிக்கின்றோம்

1 comment:

Information said...

பழைய அருமையான பாடல்.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி