புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ (2)
இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ (2)
ஞானம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
உன்னை ஒரு கணமும்
என்னை மறு கணமும்
உள்ளம் நினைப்பதென்ன (2)
நாதம் இசைத்துவரும் பாத மணிச்சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்துவரும் நீல விழி இரண்டின்
வண்ணம் சிவப்பதென்ன
எதுகை அது உனது இருக்கை
அதில் எனது பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ
மறுகை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே (2)
வைகை என்னை நெருங்கி
வைகை அணை மதுரை
வைகை அணை போலவே
மங்கை எனும் அமுத கங்கை
பெருகுவது நீந்தி கரை காணவே
பாடல் :புலமைபித்தன்
இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள் :வாணி ஜெயராம் ,ஜெயச்சந்திரன்
2 comments:
//விளக்க உறையும் நீ //
விளக்க உரையும் நீ
கணேஷ்
உங்கள் திருத்ததிற்கு நன்றி
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி