Sunday, June 8, 2008

வெள்ளி நிலா முற்றத்திலே ....

வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே

வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய

முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய

நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே

4 comments:

Unknown said...

நன்றி .
அருமையான வேலை.
காலத்தில் அழியா செல்வத்தை பாதுகாக்கும் பணி சூப்பர்.

Unknown said...

சூப்பர்

Unknown said...

thank you.super

பூங்குழலி said...

மிக்க நன்றி ராம் .உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் .

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி