Friday, June 6, 2008

தாயில்லாமல் நானில்லை ....


தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)
(தாய் இல்லாமல் நான் இல்லை)

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
(தாய் இல்லாமல் நான் இல்லை)

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி


அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

8 comments:

சு.செந்தில் குமரன் said...

niraiya ezuththup pizhai . kavaniyunggaL

Information said...

மிகவும் அருமை

இனியன் பாலாஜி said...

அடேங்கப்பா அம்மா! தாயே! யாரம்மா நீ ? சும்மா கலக்கிட்டீங்க போங்க. இது நிறைய
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும், நல்ல சினிமா பாடல்களை விரும்பும் ரசிகர்களுக்கும்,
மற்றும் கண்ணதாசன் வாலி போன்ற கவிஞர்களை விரும்பும் என் போன்றோர்க்கும்
அல்வா சாப்பிடுவது போல் கொடுததுள்ளீர்கள். அது சரி என் போன்ற் பழைய சிவாஜி
ரசிகர்களுக்கும் ஏதாவது செய்யக்கூடாதா?
உஙகளது முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
செந்தில் சார் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை சார். அவரது கடுமையான
முய்ற்சிக்கு பாராட்டியே ஆகவேண்டும்
நன்றி
இனியன் பாலாஜி
91760 85807

பூங்குழலி said...

உங்க பாராட்டு நிறைய தெம்பும் சந்தோஷமும் தருது பாலாஜி .ரொம்ப நன்றி .செந்தில் நிறைய பிழைகளை திருத்திக் கொடுத்திருக்கார் .அவர் சொன்ன திருத்தங்கள் எல்லாம் செஞ்சாச்சு .ஏதாவது திருத்தங்கள் இருந்தா கண்டிப்பா சொல்லுங்க .

Yoganathan.N said...

இந்த வலைப்பூவை தொடருகிறேன். உங்கள் சேவைக்கு நன்றி எனும் வார்த்தை போதாது... :)

Unknown said...

பகிர்வுக்கு நன்றி. நல்லா நல்ல கருத்துக்களை கவிஞ்சர்களிடம் கேட்டு பெறுவதில் வாதியாருக்கு நிகர் அவரேதான்.

3 எழுத்தில் .... அது முடிந்தப்பினும் பேச்சு இருக்கும்.

சிறிய வேண்டுகோள், பாடல் ஆசிரியர் பெயரையும் சேர்த்தால் நன்று. நன்றி வணக்கம்.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி. நல்லா நல்ல கருத்துக்களை கவிஞ்சர்களிடம் கேட்டு பெறுவதில் வாதியாருக்கு நிகர் அவரேதான்.

3 எழுத்தில் .... அது முடிந்தப்பினும் பேச்சு இருக்கும்.

சிறிய வேண்டுகோள், பாடல் ஆசிரியர் பெயரையும் சேர்த்தால் நன்று. நன்றி வணக்கம்.

பூங்குழலி said...

முடிந்தவரை முயல்கிறேன் - நன்றி

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி