Friday, May 16, 2008

காதல் என்பது ....

காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்

சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்
அந்தக் காவியம் கிடையாது
நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ
நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகி உன்னருகே
இந்தக் கதா நாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்

நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்
இந்த நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா
உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்
என்னை வாங்கிய மணிச்சரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது

காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி