Saturday, May 17, 2008

குருவிக் கூட்டம் ...

குருவிக் கூட்டம் போல நிக்கிறபூவம்மா -
உன்னைக்கொண்டு போகும் புருஷன்இங்கே யாரம்மா
அறுவடைக்கு காத்தி நிக்கிறநெல்லம்மா -
நீஆசை கொண்ட புருஷன்பேரைச் சொல்லம்மா
(குருவி)


தளதளவென நடனமாடும்தண்ணீரில் உன்னைக் கண்டானா
சலக்கு சலக்கு நடை நடந்து
கையால் உன்னைத் தொட்டானா
மளமளவென அள்ளியெடுத்து
மடியில் உன்னை வைத்தானா
வண்டாட வரும் செண்டாக
உன்னைமார்பில் அணைத்துக் கொண்டானா
(குருவி)


ஆறோடும் இளநீரோடும் வண்ணத்தேரோடும் இந்தக் காட்டிலே
யாரோடு இன்று போராட எண்ணித்தேடுகின்றாய் காற்றிலே
புல்லாடத் தலை நெல்லாட
நடைதள்ளாட வரும் பொன்னம்மா
புத்தாடை தரும் அத்தானைக்
கண்டுபடித்த பாடம் என்னம்மா
(குருவி)


ஆடி ஓடி உன்னைப் போலே
அலைந்தவள்தான் நானம்மா
அன்றொரு நாள் அவரை கண்டேன்
அடுத்த பாடம் என்னம்மா
தேடிக் கிடந்த ஆசை முகத்தை
தெரிந்து கொண்டதும் கண்ணம்மா -
அந்ததேரில் இந்த சிலையை வைக்க
நாளைப் பார்த்து சொல்லம்மா
(குருவி)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி