Saturday, May 17, 2008

சலக்கு சலக்கு சிங்காரி ...


கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி...
சலக்கு சலக்கு சிங்காரி -
உன் சரக்கு என்னடி கைகாரி


கெண்டை வேட்டி மினுங்க மினுங்க
கேலிப் பேச்சு குலுங்கக் குலுங்க
தங்கக் கடுக்கன் விளங்க விளங்க
சரசமாடும் ரங்கையா...
சரசமாடும் ரங்கையா
பரிசம் போடு எங்கையா


புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு
துள்ளித் துள்ளி நடக்கும்போது
மல்லுக் கட்டத் தோணுதடி மாமனுக்கு -
நாம வணக்கம் சொல்ல வேணுமடி காமனுக்கு


பொட்டி வண்டி மேலிருந்து
தட்டித் தட்டி ஓட்டும்போது
கட்டிக் கொள்ள தோணுதையா கண்களுக்கு -
உன்கட்டழகை காட்டாதே பெண்களுக்கு
(சலக்கு)


ஆலமரத்து நெழலப் பாத்து
அடிமரத்துல பாய் விரிச்சு
பாக்கு வெத்தல போடச் சொன்னது அப்போது -
அந்தப்பழைய கதையைக் கேக்க வந்தேன் இப்போது
வெத்தலை மடிச்சு கொடுத்தபோது
வெரலப் புடிச்சுக் கடிச்சபோது
வெக்கமா இருந்ததெனக்கு அப்போது -
எல்லாம்வெவரமாக புரியுதையா இப்போது
..யாயாயாயாயா.........யா..........


ஆத்தில் விழுந்து குளிச்சபோது
அயிரை மீனு கடிச்சபோது
கூச்சல் போட்டு அழைச்சதென்ன வள்ளியம்மா -
கையக்கொடுத்தபோது இழுத்ததென்ன கள்ளியம்மா
அயிரை மீன வெரட்டிப்புட்டு
அந்த இடத்தில் நீ இருந்து
உயிரை வாங்கி கேலி செஞ்சே ஞாபகமா -
அதுஉறவுக்கார ஆளு என்ற நாடகமா
(சலக்கு)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி