Monday, May 19, 2008

நல்ல நல்ல ....

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி

தவறு என்பது தவறி செய்வது 
தப்பு என்பது தெரிந்து செய்வது 
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் 
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் 
(நல்ல நல்ல )

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
(நல்ல நல்ல )

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

அறிவுக்கு இனங்கு வள்ளுவரைப் போல்
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்
கவிதைகள் வழங்கு பாரதியைப் போல்
மேடையில் முழங்கு திருவிக போல்

 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

பாடலில் திருத்தங்கள் சொல்லி உதவிய Abdullah Koyakutty அவர்களுக்கு நன்றி

 https://www.youtube.com/watch?v=SNePlhFN5hw

2 comments:

Unknown said...

கடைசியில் அன்பில் என்று துடங்குவதில் இருந்து முழுவதும் திருத்துங்கள்

(அறிவுக்கு இனங்கு வள்ளுவரைப் போல்
அன்புக்கு வணங்கு வள்ளளாரைப் போல்
கவிதைகள் வழங்கு பாரதியைப் போல்
மேடையில் முழங்கு அறிஞர் அன்னா போல்)

பூங்குழலி said...

மிக்க நன்றி . நீங்கள் சுட்டிக்காட்டிய திருத்தங்களை செய்துவிட்டேன் - ஆனால் அந்த கடைசி வரியில் வாயசைப்பு அறிஞர் அண்ணா என்றிருந்தாலும் பாடலில் திருவிக தான் -மீண்டும் நன்றிகள்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி