Monday, May 19, 2008

நான் அளவோடு ரசிப்பவன் ....

நான் அளவோடு ரசிப்பவன்
எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
அன்பின் அழகோடு தழுவி
உறவோடு பழகிஉயிராக நினைப்பவன்


மதுவோடு வந்து இதழ் தேடி
இதமோடு தந்து இணையாகி
பிரிந்தாலும் உள்ளம் பிரியாமல்
வாழ யார் சொல்லித் தந்ததோ..


நான் உனக்காகப் பிறந்தவள்
உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
உன்னை ஒருபோது தழுவி
மறுபோது உருகிதனியாகத் துடிப்பவள்


கன்னம் செந்தாமரை
சிந்தும் முத்தம் செந்தேன் மழை
கண்கள் இன்பக்கடல்
குரல்தான் கொஞ்சும் புல்லாங்குழல்
மங்கை பொன்னோவியம் பேசும் மழலைச் சொல்லோவியம்
கனிவான நெஞ்சில் உருவான கவிதை
என்னென்று சொல்லவோ
( நான் )


தொட்டுத் தீராததோ கைகள் பட்டும் ஆறாததோ
விட்டால் பெறாததோ இளமை வேகம் பொல்லததோ
கட்டுப் படாததோ உள்ளம் காவல் இல்லாததோ
நிலவோடு வந்து குளிர் சேர இன்னும் நாள் பார்ப்பதென்னவோ
( நான் )


முல்லைச் செண்டாகவே உன்னை மெல்லப் பந்தாடவோ
அல்லித் தண்டாகவே ஒடியும் இடையைத் தொட்டாடவோ
தொட்டில் நீயாகவே ஆடும் பிள்ளை நானாகவோ
எனதென்ற யாரும் உனதான பின்பு
நான் என்ன சொல்வதோ
( நான் )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி