Saturday, May 17, 2008

கட்டான கட்டழகு ...

கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா -
உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா


நடை போடு.. நீ நடைபோடு
நடைபோடு நடைபோடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே -
உன்இடையோடு இடையோடு
கொடி போல உள்ளம்
விளையாட வந்த நிலவே..
விளையாடு நீ விளையாடு..
விளையாடு விளையாடு
விடிகின்ற வரையில்அழகோடு வந்த துணையே -
பொன்வளையோடு வளையோடு
இசைபாடும் கையில்வளைந்தாட வந்த கலையே
(கட்டான)


பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா -
சிறுநூலென்ற இடையிலே
கால்பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா -
காதல்நோய் தந்த பெண்மையே வா


மதயானை வடிவமே நடமாடும்
வீரனேமலர் போன்ற உள்ளமே வா -
நாம்அறியாத பூமியில்
தெரியாத பாதையில்இரு பேரும் போகலாம் வா -
நாம்இரு பேரும் போகலாம் வா
(கட்டான)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி