Saturday, May 17, 2008

கட்டழகு தங்கமகள் ......

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ -
அவள்கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ -
அதைவெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்சச் சிரிப்பாளோ -
அதில்பங்கு கொள்ள தோழியரை அழைப்பாளோ
(கட்டழகு)


அன்பிருக்கும் நெஞ்சம் ஒரு ஆலயமோ -
அதில்ஆசையும் பாசமும் காவியமோ
அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ -
என்கண்களில் நீ தரும் தரிசனமோ
(கட்டழகு)


பொங்கு கடல் மடிதனில் நிலவாட -
அதில்தங்கை முகம் துள்ளி துள்ளி சதிராட
அங்கம் என்ற மலரில் உயிராட -
அன்புஎங்கிருந்தபோதிலும் புகழ் பாட
(கட்டழகு)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி