Sunday, May 18, 2008

மயங்கி விட்டேன் ....

மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ?
மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்லச் சொல்ல என்ன சுகமோ?

எங்கெங்கே
என்னென்ன
ஆஹா
இன்பங்கள் தோன்றும் என்று துடிக்க
அங்கில்லை
ஆஹா...
இங்கே தான்
ஓஹோ..
வாவென்று ஏதோ ஒன்று அழைக்க


எங்கெங்கே என்னென்னஇன்பங்கள் தோன்றும் என்று துடிக்க
அங்கில்லைஇங்கே தான்வாவென்று ஏதோ ஒன்று அழைக்க
நீ எடுக்க நான் கொடுக்க
நாம் எடுத்துக் கொடுத்த பின் அடுத்தது நடத்த
மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்லச் சொல்ல என்ன சுகமோ?


எண்ணிக் கொள்
ஆஹா
ஏந்திக் கொள்
ஓஹோஹோ..
கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்
கட்டிக் கொள்
ம்ம்..
ஒட்டிக் கொள்
ம்ம்..
காற்று நம்மிடையில் நுழையாமல்
எண்ணிக் கொள் ஏந்திக் கொள்
கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்
கட்டிக் கொள் ஒட்டிக் கொள்
காற்று நம்மிடையில் நுழையாமல்
நெய்யும் தறியினிலே
நூல் இழை போலே
நாம் இருவர் ஒருவராய் நெருங்கியதாலே
மயங்கி விட்டோம்


மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ?

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி