Thursday, May 15, 2008

சந்திரோதயம் ....

சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ
செவ்வானாமே இரு கண்ணானாதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
(சந்திரோதயம்)


குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ


இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
(இளம்)


முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
(சந்திரோதயம்)


அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே


இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
(இளம்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி