Tuesday, May 20, 2008

புத்தம் புதிய புத்தகமே ...

புத்தம் புதிய புத்தகமே
உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே -
உன்னைப்பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே
இன்றுபுதிதாய் வந்த மாணவி நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
(பள்ளி)


அஞ்சு விரல் பட்டாலென்ன
அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் இன்பம் பந்தா என்ன
வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதைத் தந்தால் என்ன
கொத்து மலர் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன
(புத்தம்)


கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
செவ்விதழைக் கண்டால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
இன்பம் இன்பம் என்றால் என்ன
(புத்தம்)

3 comments:

சு.செந்தில் குமரன் said...

niraiya spelling mistakes aana paatu varigal mayakkudhu

Unknown said...

புத்தம் புதிய புத்தகமே...இந்தப் பாடலை எழுதியது கண்ணதாசனா வாலியா?

Unknown said...

புத்தம் புதிய புத்தகமே...இந்தப் பாடலை எழுதியது கண்ணதாசனா வாலியா?

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி