Tuesday, May 20, 2008

பூமழை தூவி ....

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது -
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது -
மங்கல குங்குமம் சிரிக்கின்றது


கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா -
உனைக்கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமா
தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!
(பூமழை)


வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா -
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!
(பூமழை)


கால்பட்ட இடமெல்லாம் மலராக
கைபட்டபொருளெல்லாம் பொன்னாகணும் -
உன்கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்தக்கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!

1 comment:

TSK said...

Lyrics by:- Pulamaippithan

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி