Monday, May 19, 2008

நீயே தான் எனக்கு மணவாட்டி ..


நீயேதான் எனக்கு மணவாட்டி -
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி -
உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி


கொடுத்து வைத்தவள் நானே.......
எடுத்துக் கொண்டவன் நீயே...
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
(நீயேதான்)


கண்கள் இருக்க தோரணம் ஏனோ
கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க மணவறை ஏனோ
ஒரு மனதானால் திருமணம் ஏனோ
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....


நானேதான் உனக்கு மணவாட்டி -
உன்னைமாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
நீயேதான் எனக்கு விழிகாட்டி -
என்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி


அல்லி என்றால் சந்திரனோடு
தாமரை என்றால் சூரியனோடு
வள்ளி என்றால் வேலவனோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
(நீயேதான்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி