Tuesday, May 20, 2008

ஒண்ணொன்னா ஒண்ணொன்னா ...

ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு
இன்னும் இன்னும் மெதுவா
நெனச்சதை பொதுவா
(ஒண்ணொண்ணா)


அங்கொண்ணு இங்கொண்ணு தவிக்குது தவிக்குது மனசு
எங்கேன்னு எப்போன்னு துடிக்குது துடிக்குது வயசு
(ஒண்ணொண்ணா)


நான் ஆடையிட்டு மூடி வச்ச உடம்பு
அது ஆலையிட்டுப் பிழியாத கரும்பு
நெஞ்சில் வேரு விட்டு முளைக்குது எண்ணம்
அதை நீரு விட்டு வளக்கணும் இன்னும்
பட்டுப்பாய் இட்டுத்தான் படுக்குறபோதும்
பக்கத்துணை இல்லாட்டி துக்கம் வந்து மோதும்
ஒஹோஹோய் ஒஹோஹோய் ஒஹோஹோஹோய்..
(ஒண்ணொண்ணா)


நான் தேயிலையக் கிள்ளி வரும் நேரம்
தென்றல் ஆசை நெஞ்சைக் கிள்ளி விட்டுப் போகும்
அந்தக் காயத்துக்கு மருந்தொண்ணு வேணும்
அது கட்டழகன் தொட்டவுடன் ஆறும்
கண்ணளந்து பார்த்த உடல் தள்ளித் தள்ளி நடிக்கும்
அதைக் கையளந்து பார்க்கையிலே
அள்ளி அள்ளிக் கொடுக்கும்
ஒஹோஹோய் ஒஹோஹோய் ஒஹோஹோஹோய்..
(ஒண்ணொண்ணா)

4 comments:

சு.செந்தில் குமரன் said...

innum innum medhuva ninaichchadha podhuva

மதம் கடந்த நேயம் said...

கவிஞரின் பெயரை போடலாமே

நீங்கள் எப்படி உங்கள் பேரை போட சொல்கிறீர்களோ அதை போன்றதே

பூங்குழலி said...

எல்லா கவிஞர்களின் பெயர்களையும் கண்டெடுத்து போடுவது சிரம்ம்.இயன்ற இடங்களில் சேர்த்திருக்கிறேன்.நன்றி

nabees khan 007 said...

அருமையான கவிதை வரிகளை, வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் கவிஞர் வாலி புகுத்தியுள்ளார்!!

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி