Saturday, May 17, 2008

கண்களினால் காண்பதெல்லாம் ...

கண்களினால் காண்பதெல்லாம்மனதினிலே பார்த்து விட்டேன் - என்காட்சியிலே ஒரு கடவுளில்லை
மன சாட்சி என்றேன் நீயிருந்தாய்
(கண்களினால்)


முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்தாய்
முத்து நகையை வாழ வைத்தாய்
நெல்லில் மணி போல் பாலில் நெய் போல்
நெஞ்சில் இருந்தே நீ சிரித்தாய்
வள்ளல் மனமே பிள்ளை குணமே
அள்ளி அணைக்கும் தாயல்லவோ
ஆஹா..ஆஹா..ஆஹா..ஆ...ஆ,,,
(கண்களினால்)


உன்னைத் தொடர்ந்தே நான் வந்தேன்
ஒசை கேட்டே நான் சிரித்தேன்
சொன்ன மொழியில் உள்ளம் அறிந்தேன்
தன்னை மறந்தே தவழுகிறேன்
இன்பமேனும் துன்பமேனும்பாதி பெறவே
நான் வந்தேன்ஆஹா..ஆஹா..ஆஹா..ஆ...ஆ,,,
(கண்களினால்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி