Saturday, May 17, 2008

கண்கள் இரண்டும் ....

கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..
(கண்கள்)


மழைத்துளி விழ விழ முத்து விளையும்ஆஹா..
பனித்துளி விழ விழ மொட்டு மலரும்ஓஹோ..
தேன் துளி விழ விழ இதழ் சிவக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
கனிச்சுமை கொண்டு வந்த கொடி வளையும்ஆஹ,..கன்னியிடை

அல்லித்தண்டு மெல்ல நெளியும்ஓஹோ..
மதுக்கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப்புது கலைகளில் துயில் மறக்கும்
(கண்கள்)


முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம்
எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்
இருட்டிலும் படித்திடும் எழுத்தல்லவோ
சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ


சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்ம்ம்..
மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்
இலக்கணம் வகுப்பதும் இரவல்லவோ
பின்னோடு வருகின்ற உறவல்லவோ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி