Tuesday, May 20, 2008

பொன்னழகு பெண்மை சிந்தும் ....

பொன்னழகுப் பெண்மை சிந்தும்
புன்னகை என்னஒரு மந்திரமோ?
இல்லை தந்திரமோ?
இந்த உலகம் எங்கள் அழகுப் பெண்கள் கை வசமோ?
பொன்னழகுப் பெண்மை சிந்தும்
புன்னகை என்னஒரு மந்திரமோ
இல்லை தந்திரமோ
இந்த உலகம் எங்கள் அழகுப் பெண்கள் கை வசமொ?


மேல் நாட்டு எழில் ராணி
விழி ஜாடையில்நாடாளும் முடி வேந்தன் தடுமாறினான்
பால் போன்ற பனிக் கால்கள் பார்த்தேங்கினான்
கால் மீது தலை வைத்து களைப்பாறினான்


பொன்னழகுப் பெண்மை சிந்தும் புன்னகை என்ன
ஒரு மந்திரமோ? இல்லை தந்திரமோ?
இந்த உலகம் எங்கள் அழகுப் பெண்கள் கை வசமோ?


எழிலே உன் நிழல் கூட எனை சேர்ந்தது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
பொன் வேந்தன் பூ மேனி என் மேனி தான்
என் மேனி என்னாளும் உன் மேனி தான்


பொன்னழகுப் பெண்மை சிந்தும் புன்னகை என்ன
ஒரு மந்திரமோ? இல்லை தந்திரமோ?
இந்த உலகம் எங்கள் அழகுப் பெண்கள் கை வசமோ?


மலையில் தென்றல் பிறந்தது ஒருவருக்காகவா?
இங்கே வா..அன்பே இங்கே வா
வானம் நிலவை சுமந்தது ஒருவருக்காகவா?
இங்கே வா..அன்பே இங்கே வா
மேகம் மழையைப் பொழிந்தது ஒருவருக்காகவா?
இங்கே வா..அன்பே இங்கே வா
இறைவன் அழகைக் கொடுத்தது ஒருவருக்காகவா?
இங்கே வா.. அன்பே இங்கே வாவா வா வா..

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி