பொன் அந்தி மாலைப்பொழுதுபொங்கட்டும் இன்ப நினவு
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
(பொன்)
மலைமகள் மலருடை அணிந்தாள் -
வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள் -
தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில்
இசை நம்மை மயக்கட்டுமே
உதயத்துக் காலையில் விழித்திடும் வேளையில்
மலர்களூம் விழிக்கட்டுமே
(பொன்)
கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி
என்னைத் தேடி ஆடிவர
கன்னித்தேனை உண்ணும் பார்வை
வண்ணம் நூறு பாடி வர
மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை
சொல்லிச் சொல்லி மயங்கட்டும் இளமை
என்னேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ
(பொன்)
ஆடை மூடும் ஜாதிப்பூவில்ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்போதை உண்டாக
கண்ணோடு கண் பண் பாடுமோ
பெண் மேனிதான் என்னாகுமோ
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
(பொன்)
Tuesday, May 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி