Tuesday, May 20, 2008

பட்டுச் சேலை .....

பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே -
என்னைக்காதல் வலையில் அடைத்தவளே
அரும்பு மீசை துள்ளி வர
அழகுப் புன்னகை அள்ளி வர
குறும்புப் பார்வை பார்த்தவரே -
என்னைக்கூட்டுக் கிளியாய் அடைத்தவரே


கையில் எடுத்தால் துவண்டு விழும்
கன்னம் இரண்டும் சிவந்து விடும்
சின்ன இடையே சித்திரமே
சிரிக்கும் காதல் நித்திலமே
நிமிர்ந்து நடக்கும் நடையழகு
நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதியில் நிறையும் முகத்தழகு
யாவும் உந்தன் தனியழகு
(கட்டுக்)


உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள்தோறும் அலைந்தாலும்
மனதில் நின்றது ஒரு முகமே
மங்கை உந்தன் திருமுகமே
காசு பணங்கள் தேவையில்லை
ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
தாவி வந்தது என் மனமே -
இனிதாழ்வும் வாழ்வும் உன் வசமே
(கட்டு)

2 comments:

தமிழ்முரசு said...

மிகவும் அருமை நானும் ஒரு புரட்சி தலைவனின் ரசிகன் எம் இனம் காக்க உதவியவர் புரட்சி தலைவர்

பூங்குழலி said...

மிக்க நன்றி தமிழ்முரசு

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி