Monday, May 12, 2008

கண் மூடும்

கண் மூடும் வேளையிலும்
கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின்
விலை இந்த உலகே

மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே

கண் மூடும்.... கண் மூடும் வேளையிலும்
கலை கண்டு மகிழும்
கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா
சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்
சின்ன சின்ன சிட்டு போல
வண்ணம் மின்னும் மேனி
கண்டு கண்டு நின்று நின்று
கொண்ட இன்பம் கோடி

(கண் மூடும்)

பண் பாடும் நெறியோடு
வளர்கின்ற உறவில்
அன்பாகும் துணையாலே
பொன் வண்ணம் தோன்றும்
எண்ணி எண்ணி பார்க்கும் போதும்
இன்ப ராகம் பாடும்
கொஞ்ச நேரம் பிரிந்த போதும்
எங்கே என்று தேடும் (கண் மூடும்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி