Friday, May 9, 2008

அட ஆறுமுகம் ....

அட ஆறு முகம், இது யாரு முகம்?
அட ஆறு முகம், இது யாரு முகம்?
அட ஆறு முகம், இது யாரு முகம்?

தாடியை வச்சா வேறு முகம்
தாடி எடுத்தா தங்க முகம்
ஊடலுக் கொண்ணு காதலுக்கொண்ணு
ஒன்பது பாவம் காட்டும் முகம் ,
ஊடலுக்கொண்ணு காதலுக்கொண்ணு
ஒன்பது பாவம் காட்டும் முகம்
அட ஆறு முகம், இது யாரு முகம்?

இருட்டில் ஓடி வந்தாளாம்
விளக்கைக் கொண்டு வந்தாளாம்
முகத்தைக் கண்டு கொண்டாளாம்
குதித்து ஆடுகின்றாலாம்
இருட்டில் ஓடி வந்தாளாம்
விளக்கைக் கொண்டு வந்தாளாம்
முகத்தைக் கண்டு கொண்டாளாம்
குதித்து ஆடுகின்றாளாம்


நடக்கட்டும் உடற்கட்டு துடிக்கட்டும்
மனத்தில் ஆசை வைத்தாராம்
மறைத்து மூடி வைத்தாராம்
பறித்துப் போக வந்தாராம்
சுவைத்துப் பார்க்க வந்தாராம்
மனத்தில் ஆசை வைத்தாராம்
மறைத்தது மூடி வைத்தாராம்
பறித்துப் போக வந்தாராம்
சுவைத்துப் பார்க்க வந்தாராம்
நடக்கட்டும் பழத் தத்து சுவைக்கட்டும்


நாடகம் நடிப்பு
காதலில் துடிப்பு
ஏனிந்த சிரிப்பு?
ஆனந்தக் களிப்பு

அட ஆறு முகம்,
இது யாரு முகம்?
தாடியை வச்சா வேறு முகம்
தாடி எடுத்தா தங்க முகம்
ஊடலுக்கொண்ணு, காதலுக்கொண்ணு
ஒன்பது பாவம் காட்டும் முகம்

அழைத்தால் தேடுது நெஞ்சம்
நினைத்தால் எங்குது மஞ்சம்
இணைந்தால் ஆயிரம் கொஞ்சும்
பிரிந்தால் வாவெனக் கெஞ்சும்
இடம் கண்டு சுகம் கண்டு மயங்கட்டும்

மாப்பிள்ளை முறுக்கு
பார்வையில் இருக்கு
நாளைய கணக்கு
பூமாலையில் இருக்கு

அட ஆறு முகம், இது யாரு முகம்?
தாடியை வச்சா வேறு முகம்
தாடி எடுத்தா தங்க முகம்
ஊடலுக்கொண்ணு காதலுக்கொண்ணு
ஒன்பது பாவம் காட்டும் முகம்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி