Tuesday, May 20, 2008

பறக்கும் பந்து பறக்கும் ....

பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

ஓடும் உனை நாடும்
எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும்
உந்தன் பதில் கொண்டு வந்து போடும்


பறக்கும்
பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது


இது தான் அந்த நிலவோ
என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை
என்று போராடும் கண்ணில் வண்டு
வருவார் இன்று வருவார்
என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும்
என்று வழி பார்க்கும் காதல் செண்டு


பறக்கும்
பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது


முதல் நாள் இரவில் தனியே
என்னை அழைத்தோடி வரும் தென்றல்
இவர் தான் கொஞ்சம் கவனி
என்று இழுத்தோடி வரும் கண்கள்
அருகில் மிக அருகில்
கண்டு அணை மீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும்
இன்று அலை பாய்ந்து வரும் உள்ளம்


பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி