பண்பாடும் பறவையே என்ன தூக்கம் -
உன்பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்
தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா -
நீதாயற்ற கன்று போல் ஆகலாமா ?
(பண்)
ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு
தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு
தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு
(பண்)
அடிமை வாழ்வுப் பாடம் இன்னும் படிக்கலாமா -
நல்லஅமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா
தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா -
பெற்றதாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா
(பண்)
பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் -
அவர்பரம்பரையின் கால்கள் மீதும் மலர்களை வீசும்
பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும்
அவர் பால் குடித்த தாயைக் கூட பேய் எனப் பேசும்
கொடுத்த பாலில் வீரம் கலந்துகொடுத்தாள் உந்தன் அன்னை
குடித்த பிறகும் குருடாய் இருந்தால்கோழை என்பாள்
உன்னைஉரிமைக் குரலை உயர்த்தி
இங்கேவிடுதலை காணத் துடித்து வா
உறங்கியதெல்லாம் போதும் போதும்
உடனே விழித்து எழுந்து வா..
எழுந்து வா.. எழுந்து வா..
Tuesday, May 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி