Friday, May 16, 2008

இந்த புன்னகை என்ன விலை ....

இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
(இந்த)


எழுதிய கவிதைகள் ஆயிரமோ
எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ
(இந்த)


எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே
(இந்த)


கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தான்
காலத்தில் காதலை வாழ வைத்தான்
இவள் மூடிய பார்வையில் மயக்கம்
இதழ் ஓதிய வார்த்தையில் மௌனம்
இன்று ஆரம்பப் பாடத்தைப் படித்தேன்
அதை உன்னிடமே நான் நடித்தேன்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே
(இந்த)


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி