Friday, May 9, 2008

ஆடலுடன் பாடலை ....


ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக

செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட
உரியவன் நீ தானே

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு


விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஆடலுடன் ......................

குறிப்பு

இந்த பாடலுக்கு விஜயலட்சுமியுடன் ஆட வேண்டும் என்று கூறியவுடன் மக்கள் திலகம் ,'அய்யய்யோ !அவ பிறக்கும் போதே காலில் சலங்கை கட்டிக் கொண்டு பிறந்தவ ,அவ கூட நானாவது ஆடுறதாவது !'என்று முதலில் யோசித்தாராம் .பலரின் வற்புறுத்தலின் பெயரில் சம்மதித்தவர் பல நாள் பயிற்சி செய்து விஜயலட்சுமிக்கு ஒப்பாக ஆடினார் என்பதை சொல்லவும் வேண்டுமா ?





1 comment:

Unknown said...

இந்தப் பாடல் சரி இல்லை,வேண்டாம் என்று சொல்லி விட்டார் படத் தயாரிப்பாளர்..ஆனால் இசையமைப்பாளர் விசுவநாதனுக்குப் பிடித்து விட்டது.ஒரு வழியாகப் படத்தில் இடம் பெற்றது பாடல்.இதிலொரு சிறப்பு என்னவென்றால் 1967..ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பாடலுக்கான பரிசைத் தட்டிச் சென்றது அப்பாடல்..

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி