Saturday, May 10, 2008

நீல நயனங்களில் ...

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது


கனவு ஏன் வந்தது?
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது
பள்ளிக்கொள்ளாதது

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ -
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ


பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை
பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
வெட்கம் உண்டாகுமோ
அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது
(நீலநயனங்களில்)


மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
(நீலநயனங்களில்)

2 comments:

Dr.V.K.Kanniappan said...

இப்பாடல் என்ன ராகத்தில் அமைந்தது?

பூங்குழலி said...

எனக்கு தெரியவில்லை -தெரிய வந்தால் நிச்சயம் பகிர்கிறேன்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி