Sunday, May 18, 2008

மாணிக்கத் தொட்டில் ....

ஆரிராரோ ஆரிராரோஆரிராரிராராரோஆரிராரிராராரோ
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக யார் கொடுத்தாள்
அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள்


மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக ஏன் கொடுத்தேன்
அது கடமையென்றே நான் கொடுத்தேன்
ஆரிராரோ ஆரிராரோஆரிராரிராராரோஆரிராரிராராரோ


கொடியில் பிறந்த மலரை
கொடி புயலின் கைகளில் தருமோ
கொடியில் பிறந்த மலரை
கொடி புயலின் கைகளில் தருமோ
மடியில் தவழ்ந்த மகனை
தாய் மறக்கும் காலம் வருமோ

புகுந்த வீட்டை நினைத்தாள்
மனை விளங்க நினத்த பேதை
புகுந்த வீட்டை நினைத்தாள்
மனை விளங்க நினத்த பேதை
பிறந்த மகனைக் கொடுத்தாள்
அவள் வகுத்த புதிய பாதை
அவள் வகுத்த புதிய பாதை


மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக யார் கொடுத்தாள்
அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள்


ஆரிராரோ ஆரிராரோஆரிராரிராராரோஆரிராரிராராரோ
இமையில் வளர்ந்த விழியை
இமை எரியும் நெருப்பில் விடுமோ
இமையில் வளர்ந்த விழியை
இமை எரியும் நெருப்பில் விடுமோ
இடையில் சுமந்த மகனை
மனம் இழக்க சம்மதப் படுமோ

இன்று நாளை மாறும்
நம் இதயம் ஒன்று சேரும்
சென்ற மகனும் வருவான்
முத்தம் சிந்தை குளிரத் தருவான்
முத்தம் சிந்தை குளிரத் தருவான்


மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக ஏன் கொடுத்தேன்
அது கடமையென்றே நான் கொடுத்தே



1 comment:

Information said...

நல்ல சோகப் பாடல்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி