Monday, May 19, 2008

நாடு அதை நாடு ...


நாடு அதை நாடு..
அதை நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
( நாடு )


பாலைவனம் என்றபோதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
( நாடு )


வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
( நாடு )


பசி என்று வந்தோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
( நாடு )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி