Friday, May 16, 2008

இரவினிலே என்ன நினைப்பு .....

இரவினிலே என்ன நினைப்பு?
இயற்கையிலே என்ன பிணைப்பு?
மனதினிலே என்ன நினைப்பு?
வரவில்லையோ இளம் சிரிப்பு?
இரவினிலே என்ன நினைப்பு?
இயற்கையிலே என்ன பிணைப்பு?
மனதினிலே என்ன நினைப்பு?
வரவில்லையோ இளம் சிரிப்பு?


சந்தனச் சிலையன்று அருகிருக்க
தாமரைக் கொடி போல் இடையிருக்க
வந்தாடும் விழி பார்த்திருக்க
பால் போல் நிலவும் துணையிருக்க
முல்லை மல்லிகை பூவிருக்க
முத்து முத்தாக நகையிருக்க
தன்னை மறந்ததும் சரி தானோ?
தனிமை கொண்டதும் முறை தானோ?


இரவினிலே என்ன நினைப்பு?
இயற்கையிலே என்ன பிணைப்பு?
மனதினிலே என்ன நினைப்பு?
வரவில்லையோ இளம் சிரிப்பு?


பூமியின் வயிற்றில் பொன்னிருக்கும்
பூவையின் முகத்தில் கண்ணிருக்கும்
பொன்னுக்கு கண்ணே பொருந்தாதோ?
பொருந்தாதென்றால் வருந்தாதோ?
அந்தி மந்தாரை பூப் போலே
அழகிய குங்குமம் நெற்றியிலே
மங்கல மேளம் முழங்கலையோ?
மாப்பிள்ளை நெஞ்சம் மயங்கலையோ?
அஹஹா.. ஆஆஆஆஆஆஆஆ ...


இரவினிலே என்ன நினைப்பு?
இயற்கையிலே என்ன பிணைப்பு?
மனதினிலே என்ன நினைப்பு?
வரவில்லையோ இளம் சிரிப்பு?

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி