Monday, May 19, 2008

நிலவென்னும் ஆடை ....

நிலவென்னும் ஆடை கொண்டாளோ -
அவள்தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை கொண்டாள -
அவள்தன் கூந்தலில் மறைந்தாளோ


இரவிலே தன்னைத்தானே காண நினைத்தாளோ
இளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ
பெண்ணே பெண்ணோடு பேசுமோ -
சுகம்என்னென்று கூறுமோ
என் முன்னே வராமல் தீருமோ -
நிழல்முத்தங்கள் சிந்துமோ


நிலவென்னும் மேடை கண்டானோ -
அவன்தன் நிழலுக்கு நின்றானோ
மலரென்னும் வாடை கொண்டானோ -
அவன்பெண் மயக்கம் கொண்டானோ


பருவத்தை நேரில் கண்டு ஆட நினைத்தானோ
பாடினால் கூடுமென்று பாடி முடித்தானோ
பாவம் என்னென்ன வேகமோ -
நிழல்பார்த்தாலும் போதுமோ
இவள் பாதம் கண்டாலும் போதுமோ -
அவன்எண்ணங்கள் தீருமோ
( நிலவென்னும்)


ஆண்மையின் கையில்தானே பெண்மை வரவேண்டும்
வந்தபின் பெண்மைதானே இன்பம் தர வேண்டும்
மன்னவன் கோபம் கொண்டால் கண்ணீர் விட வேண்டும்
வஞ்சியர் வஞ்சம் வைத்தால் பாதம் தொட வேண்டும்
ஒன்றில் ஒன்றாகப் பேசலாம் -
அதில்யாரென்று பார்க்கலாம்
இங்கு வந்தால் நன்றாகப் பேசலாம் -
ஒன்று தந்தாலும் போகலாம்
( நிலவென்னும்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி