Sunday, May 18, 2008

மெல்லப் போ ...


மெல்லப் போ மெல்லப் போமெல்லிடையாளே மேள்ளப்பூ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால்சொல்லிப் போ மல்லிகையே
(மெல்லப் போ)


ஓடையில் நீரலை மேடையில்
தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம்
தொட்டில் கட்டிப் பாடும் பூங்கொடி
பள்ளி கொள்ளத் தோன்றும் பைங்கிளி
அந்தி மாலையில் இந்த சோலையேசொர்க்கமாகுமோ


மெல்லத் தான் மெல்லத் தான் மயங்கி நடந்தாள் மாது
சொல்லத்தான் சொல்லத்தான்தயங்கி வரைந்தாள்
தூதுஇப்பொழுதே..
(மெல்லப் போ)


செம்மாங்கனி புன்னகை நல்லோவியம் -
செவ்விதழ்தேன்மாதுளை பொன்மொழி சொல்லோவியம்
சிந்து நடை போடும் பாற்குடம்
சின்ன விழிப் பார்வை பூச்சரம்
என்ன மேனியோ இன்னும் பாடவோ
தமிழ் தேடவோ
(மெல்லப் போ)


பொன்னெழில் தாமரைப் பூவினாள் -
மன்னவன்கண்விழி பொய்கையில் மேவினாள்
தொட்டில் கட்டிப் பாடும் பூங்குயில்
முத்தம் ஒன்று வேண்டும் ஆண் குயில்
அந்தப் பாடலில் அன்பு ஊடலில் மங்கை மாறினாள்
(மெல்ல்ப் போ)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி