Saturday, May 17, 2008

கண்ணே கனியே ...

கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே...அருகே வா...
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன
வாகனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
(கண்ணே)


செம்மாதுளையோ பனியோ மழையோ
உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம்பாளை மின்னல் கீற்று
வடித்த சுகம் என்ன
ஒரு கோடி முல்லைப்பூ
விளையாடும் கலை என்ன
வாவென்பேன் வர வேண்டும்
தாவென்பேன் தர வேண்டும்
(கண்ணே)


ஒரு நாளிரவு நிலவை எடுத்து
உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு
நல் வண்ணம் தந்தானோ
என்னைக் காணச் சொன்னானோ
துணை சேரச் சொன்னானோ
ஆனந்தம் வரவாக
ஆசை மனம் செலவாக
(கண்ணே)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி