அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ -
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ (x2)
அலையை போலே ஆழியின் மேலே -
உள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே
நிலை தடுமாறுதே விழிகளும் தேடுதே
நினைவிலுமே கனவிலுமே அவரை நாடுதே (அசைந்தாடும் )
கதையா கற்பனையா காவியமா
கண்ணால் பேசும் ஓவியமா
காதலின் த்யாகியா கடந்திடும் போகியா
காரணமே நான் அறியேன் மனமே ஏங்குதே (அசைந்தாடும் )
Thursday, May 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்களது பதிவிற்கு மிகவும் நன்றி. நமக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது என்றால் அதற்கு அநேக காரணங்கள் இருக்கலாம். சினி பாடல்கள் மூலமே எனக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது என்றால் அது நமது எம்ஜிஆர் அவர்கள்தான். இவர் பாடிய அனைத்து பாடல்களுமே எனக்குப் பிடிக்கும். ஒருவேளை எனக்குப் பிடித்த பாடல்களையே அவர் பாடியிருக்கிறாரா. இனிமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்து தனது படங்களில் சேர்ப்பது என்பது அவருக்கு கைவந்த கையாகும். அது சரி. நான் பணிபுரிந்து வந்த காலத்தில் எனக்கும் பூங்குழலி என்று ஒரு நண்பி ஒருவர் என்னுடன் பணி புரிந்தார். அவர் பூந்தமல்லியைச் சேர்ந்தவர். அவர்தானா நீங்கள்.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி .எனக்கும் அவரளவு எல்லோருக்கும் பிடித்த இசையையும் பாடல்களையும் வேறு எவரும் தரவில்லை என்றே தோன்றுகிறது .அவர் பாடல்களின் வெற்றி போல் இனி எந்த ஒரு திரைப்பாடல் பெற முடியாது என்பதும் உண்மை.உங்களுடன் பணிபுரிந்த தோழி நானல்ல .மீண்டும் நன்றிகள்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி