Saturday, May 17, 2008

காலத்தை வென்றவன் ....


காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....
(காலத்தை)


நடந்தால் அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
(காலத்தை)


அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
(காலத்தை)


பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்
(வேதனை)
சுடராக..


தோளில் திகழ் மலைத் தொடராக
தோகையின் நெஞ்சம் மலராக
உள்ளத்தில் இருக்கும் கனவாக
ஊருக்குத் தெரியா உறவாக
(காலத்தை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி