Saturday, May 17, 2008

கண்ணன் எந்தன் காதலன் ...

கண்ணன் எந்தன் காதலன்கண்ணில் ஆடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன்.. கனவில்என்னைச் சேர்ந்தவன்


காதல் தேவன் கோயிலில்மாலை மாற்றினாள்
கண்ணிரண்டில் ஆசை என்னும்தீபம் ஏற்றினாள்
ராதை எந்தன் காதலி
தத்திச் செல்லும் வண்ணப் பைங்கிளி
ஊஞ்சலாடினாள்.. மனதில்ஊஞ்சலாடினாள்


விழிகள் கேட்டு வாங்கி வரும்இதயம் அல்லவோ -
அதுதேனோடை கண்டு நீராட
இன்னும் போதாது என்று போராட
நீலவண்ணப் பூங்குழல் முகத்தை மூடுதே
நாணம் வந்து போன பின்பு சுகத்தைத் தேடுதே
(கண்ணன்)


கொடியில் பூத்த ஜாதிமுல்லை மடியில் பூத்ததோ -
மலர்க் கொத்தாட நகை முத்தாட
இந்த வண்டாட மனம் திண்டாட..ஆ....
கன்னம் என்னும் தாமரை சிவந்து போகலாம்
சிறகில்லாமல் இதயவானில் பறந்து போகலாம்

(ராதை )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி