Friday, May 16, 2008

தன்னுயிர் பிரிவதை ..

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன் நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

என்னுடனே எந்தன் பூ உடல் வாழும்
உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

தெய்வத்தை நினைத்தேன் தேரென்று வளர்ந்தேன்
தென்றலை நினைத்தே பூவென்று மலர்ந்தேன்
தேரென்றும் இல்லை பூவென்றும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்
வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்
மாளிகை இல்லை மன்னனும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்




படம் : பணம் படைத்தவன்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
இசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர் : பி.சுசீலா
இயக்கம் : டி.ஆர்.ராமண்ணா
வருடம் : 1965

தகவல்களுக்கு நன்றி தனிமை அரசன்

3 comments:

Anonymous said...

பாடலாசிரியர் பெயர் பாடியவர் பெயர் மற்றும் இசையமைப்பாளர் பெயர்களையும் படத்தோட பெயரையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும்

தனிமை அரசன் said...

படம் : பணம் படைத்தவன்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
இசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர் : பி.சுசீலா
இயக்கம் : டி.ஆர்.ராமண்ணா
வருடம் : 1965

பூங்குழலி said...

உங்கள் தகவல்களை பதிவில் சேர்த்துவிட்டேன் நன்றி

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி