Friday, May 16, 2008

விழியே விழியே ...

விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக - நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக

விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட...
இங்கு நான்கு கண்களூம் உறவாட...

கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா (விழியே)

காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள வருவாயோ
கனியே கொஞ்சம் தருவாயோ
ஆற்றங்ரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தர வேண்டும் தந்து பெற வேண்டும் (விழியே)


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி