Friday, May 9, 2008

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ......

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான் (2)
(கொடுத்ததெல்லாம்)


மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா  ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
(கொடுத்ததெல்லாம்)


இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று  வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
(கொடுத்ததெல்லாம்)

படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் 
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட
சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
(கொடுத்ததெல்லாம்)

8 comments:

Sakthi said...

nice work.. thank you...

Anonymous said...

Hi பூங்குழலி,

The 3rd para should be like this

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
ஏதுவந்த போதும் பொதுவேன்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

Anonymous said...

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவேன்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

Anonymous said...

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

பூங்குழலி said...

உங்கள் திருத்தத்திற்கு நன்றி ... ...மாற்றி விட்டேன்

Anonymous said...

3வது சரணம் விடுபட்டுபோய்விட்டது ..

படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டால்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட
சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் பொருத்ததில்லை

Anonymous said...

படைத்தவன்மேல்......

https://www.youtube.com/watch?v=-wpEHv8y4R4

starting 2:16
end 2:36

பூங்குழலி said...

திருத்தம் செய்துவிட்டேன் -மிக்க நன்றி .எங்கிருந்தாலும் எவராக இருந்தாலும் வாழ்க

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி