இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது காதல் கலை
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு மாலை சூடியதேன் ஆண்டவன் நீ என்று வணங்கி நின்றேன்
அவள் ஆண்டாள் ஆனதனால்
காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
உனை கண்டால் பாய்வதென்ன
காலடி ஓசையில் பிறக்கும் இன்பம்
கானம் பாடுவதால் இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது காதல் கலை
தாமரை கன்னி சூரியன் வந்தால் கனிபோல் ஏன் சிரித்தாள் மங்கல ராணி நீரினில் ஆட
மஞ்சள் தூவியதால் நீ தொடும் வேளையில் கொதிப்பதேன்
எந்தன் நிழலும் சுடுவதென்ன
பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி திருநாள் தேடுவதால்
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை
அது காதல் கதை
Wednesday, May 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தாமரை கன்னி சூரியன் வந்தால் கனிபோல் அல்ல தமிழ் போல் .மங்கல ராணி அல்ல பூங்குழல் ராணி ,என அமைதல் நலம் தானே சகோ ?
நீ தொடும் வேளையில் கொதிப்பதேன் என்பது கொதிப்பும் என்ன ..என அமைதல் வேண்டாமோ சகோதரி ?
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி