Wednesday, May 14, 2008

ஒரு தாய் மக்கள் ....

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்


உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்

3 comments:

kasirajanarchitect said...

all the very best for ur effort..... keep going cheers

Unknown said...

மக்கள் திலகத்தை பற்றிய உங்கள் கவிதை..... Simply Superb !
நான் பல இடங்களில் அதை பயன்படுத்தி இருக்கிறேன்.
இனிமேல் பயன்படுத்துகிறபோது, அது உங்கள் கவிதை என்றும் உங்கள் வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுகிறேன். நன்றி.

24-06-2014 என்றும் அன்புடன், சந்துரு

பூங்குழலி said...

மிக்க நன்றி சந்துரு உங்கள் பாராட்டுக்கும் புரிதலுக்கும்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி